வெங்கட்பிரபுவின் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,May 26 2017]

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபுவின் அடுத்த படம் குறித்த முழு தகவல்கள் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். 'நாளை முதல் வேட்பாளர் அறிமுகம்' என்று வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்த நிலையில் தற்போது முதல்கட்ட வேட்பாளர்களான இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களை அவர் அறிமுகம் செய்துள்ளார்.

வெங்கட்பிரபுவின் 'பிளாக் டிக்கெட் கம்பெனி' மற்றும் பத்ரி கஸ்தூரி ஆகியோர்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை சரவணன் ராஜன் என்பவர் இயக்கவுள்ளார். இதுவே வெங்கட்பிரபுவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் ஆகும்.

இந்த படத்தில் 'இதுதாண்டா போலீஸ்' புகழ் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஒரு முன்னணி நடிகர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதுகுறித்த தகவல் வெங்கட்பிரபுவின் அடுத்தகட்ட வேட்பாளர் பட்டியலில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இசையமைப்பாளர் தொகுதிக்கு யுவன்ஷங்கர் ராஜா போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.