வெங்கட்பிரபுவின் 2வது இன்னிங்ஸ் இன்று ஆரம்பம்

  • IndiaGlitz, [Monday,April 11 2016]

இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கிரிக்கெட் சம்பந்தமான திரைப்படமான 'சென்னை 28' படத்தின் இரண்டாவது இன்னிங்ஸ் இன்றுமுதல் ஆரம்பமாகிறது.


வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த 'சென்னை 600028' படத்தின் இரண்டாம் பாகமாக 'சென்னை 600028 II படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் தொடங்குகிறது. இந்த படத்தின் பூஜை ஏற்கனவே சமீபத்தில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்பாகம் சென்னையை மையமாக வைத்து படமாக்கப்பட்ட நிலையில் இரண்டாவது பாகத்தின் பெரும்பாலான காட்சிகள் குற்றாலம், தென்காசி போன்ற தென்மாவட்டங்களில் படமாக்கப்படவுள்ளது.

ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், நிதின் சத்யா, மகத், வைபவ், விஜய்வசந்த், விஜயலட்சுமி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கின்றார். வெங்கட்பிரபு இந்த படத்தை தயாரித்து இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது