'மாநாடு' படத்தை மோசம் என கூறியவருக்கு வெங்கட்பிரபு கூறிய பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் டைம் லூப் டெக்னிக் பயன்படுத்தப்பட்டது என்பதும் பாமரருக்கும் புரியும் வகையில் மிகவும் தெளிவாக எடுக்கப்பட்டு இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் என அனைத்து விமர்சனங்களும் கூறி இருந்தன.
இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக ‘மாநாடு’ படத்தை விமர்சனம் செய்து ரசிகர் ஒருவர் கூறிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த விடியோவில், ‘‘மாநாடு’ படத்தில் ஒரே காட்சி திரும்ப திரும்ப வருகிறது என்றும் நான் பார்த்த படங்களில் மோசமான படம் ‘மாநாடு’ படம் தான் என்றும் கூறியுள்ளார். மேலும் இது டைம்லூப் படம் என்று யாரும் என்னிடம் சொல்லவில்லை என்றும் அப்பாவியாக கூறியிருந்தார்.
இது குறித்த வீடியோவை பிரேம்ஜி பகிர்ந்து உள்ள நிலையில் இதற்கு வெங்கட்பிரபு விளக்கம் அளித்துள்ளார். அதில் ’அனைத்து விமர்சனங்களையும் நாம் நேர்மறையாக எடுத்துக்கொள்வோம் என்றும், அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும்’ என்று கூறிய வெங்கட்பிரபு ’நாம பார்க்காத விமர்சனங்களா’ என்று தெரிவித்துள்ளார்
மேலும் ’அடுத்த படம் இவருக்கும் பிடிக்கிற மாதிரி, புரியிற மாதிரி எடுக்க ட்ரை பண்ணுவோம்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இயக்குனர் வெங்கட்பிரபுவின் இந்த டீசன்டான பதில் தற்போது வைரலாகி வருகிறது.
All criticism we have to take it in right spirit Prem!! Good or bad!! Namba paakadha criticism ah!! Adutha Padam ivarukkum pudikura maathiri puriyura maathiri try pannuvom @Premgiamaren #SpreadLove https://t.co/PQY4cCGhSz
— venkat prabhu (@vp_offl) January 16, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments