'கோட்' டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம்.. இயக்குனர் வெங்கட் பிரபு அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'கோட்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி மற்றும் நேரம் குறித்த தகவலை இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விஜய் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் 'கோட்’ திரைப்படத்தின் டிரைலர் வரும் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்துள்ளார். மேலும் அவர் விஜய்யின் அட்டகாசமான ஸ்டைலிஷ் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
GET . SET . GOat 🔥
— venkat prabhu (@vp_offl) August 15, 2024
Buckle up.. #TheGoatTrailer is landing on your screens on August 17th, 5 PM 💥@actorvijay Sir
A @vp_offl Hero
A @thisisysr Magical #TheGreatestOfAllTime#ThalapathyIsTheGOAT#KalpathiSAghoram#KalpathiSGanesh#KalpathiSSuresh @Ags_production… pic.twitter.com/Am4OXIlBrK
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com