போடுறா வெடிய... 'கோட்' ரிலீஸ் தேதியை அறிவித்த வெங்கட்பிரபு.. சரியான பண்டிகை நாள் தான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் ‘கோட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. விஜய், வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்பட படக்குழுவினர் அனைவரும் தற்போது ரஷ்யாவில் இருக்கும் நிலையில் விறுவிறுப்பான படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் இந்த படப்பிடிப்புடன் ‘கோட்’ படத்தின் ஒட்டு மொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் இயக்குனர் வெங்கட் பிரபு, ‘கோட்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகை தினத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளார். ரம்ஜான் வாழ்த்துக்களுடன்.. விநாயகர் சதுர்த்திக்கு வரோம்.. செப்டம்பர் 5ஆம் தேதி நம்ம தளபதிக்கு விசில் போடு’ என்று வெங்கட் பிரபு அறிவித்துள்ள நிலையில் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மேலும் இந்த பதிவில் அவர் விசில் போடு என்ற ஹேஷ்டைக்கை பயன்படுத்தி உள்ள நிலையில் கண்டிப்பாக சிஎஸ்கே அணி குறித்த காட்சிகள் இருக்கும் என்றும் யூகிக்கப்படுகிறது. மொத்தத்தில் விஜய்யின் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பார்வதி நாயர், மோகன், ஜெயராம், அஜ்மல், யோகிபாபு, விடிவி கணேஷ், வைபவ், பிரேம்ஜி, கஞ்சா கருப்பு உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
Eid vaazhthukaludan.. vinayaga chathurthi ku varrom #TheGreatestOfAllTime from SEPTEMBER 5th!! Namma #Thalapathy ku #WhistlePodu @actorvijay @archanakalpathi @aishkalpathi @thisisysr #TheGOAT #aVPhero pic.twitter.com/xuWT02pKJt
— venkat prabhu (@vp_offl) April 11, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com