சன்னிலியோனுக்காக இணையும் விஜய்சேதுபதி - வெங்கட்பிரபு!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்து வரும் தமிழ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடித்து வரும் படங்களில் ஒன்று ’ஓ மை கோஸ்ட்’ . தமிழில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஹீரோவாக சதீஷ் மற்றும் ஹீரோயினாக தர்ஷா குப்தா நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஒரு பாடல் சென்னையில் சமீபத்தில் படமாக்கப்பட்டது என்பதும் அதில் லுங்கி அணிந்து சன்னி லியோன் டான்ஸ் ஆடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. திகில் காமெடி மற்றும் வரலாற்று பின்னணி கொண்ட இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை படக்குழுவினர் தொடங்கியுள்ளனர். முதல்கட்டமாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் 6-ஆம் தேதி மாலை 06.04 மணிக்கு நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் வெங்கட்பிரபு ஆகிய இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.