வெங்கட்பிரபுவுடன் இணையும் ராகவா லாரன்ஸ்: ஒரு ஆச்சரிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,December 04 2019]

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’பார்ட்டி’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் சிம்புவை வைத்து இயக்கும் ’மாநாடு’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்நிலையில் பிரபுதேவா மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து வெங்கட் பிரபு தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’கடவுள் மிகவும் கருணையானவர். நல்லதே நினைப்போம், நல்லதே பேசுவோம், நல்லதே நடக்கட்டும், அருமை சகோதரர் ராகவா லாரன்ஸ் அவர்களுக்கு நன்றி, விரைவில் புதிய அறிவிப்பு வெளியாகும்’ என்று தெரிவித்துள்ளார்

வெங்கட்பிரபுவின் இந்த டுவீட் காரணமாக இருவரும் ஒரு படத்தில் இணைய இருப்பதாகவும் இந்த வித்தியாசமான காம்பினேஷன் தமிழ் திரையுலகை கலக்கும் என்றும் கூறப்படுகிறது. வெங்கட்பிரபு, ராகவா இணையும் அறிவிப்பு வெளிவரும் போது அது வேற லெவலாக இருக்கும் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்