வெங்கட்பிரபு-நாக சைதன்யா படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: டைட்டில் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன என்பதை தெரிந்தே.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அந்த வகையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பஸ்ட் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த படத்திற்கு படக்குழுவினர் ’கஸ்டடி’ என்ற டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தில் நாக சைதன்யா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்தசாமி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
Let’s be the change we want to see in the world! Happy bday bro @chay_akkineni let the hunt begin! #Custody #AvenkatPrabhuHunt @SS_Screens @ilaiyaraaja @thisisysr @srkathiir @thearvindswami @IamKrithiShetty @realsarathkumar @rajeevan69 #vp11 pic.twitter.com/ELhxOkfuci
— venkat prabhu (@vp_offl) November 23, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments