வெங்கட்பிரபு-நாக சைதன்யா படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: டைட்டில் அறிவிப்பு

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகின்றன என்பதை தெரிந்தே.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அந்த வகையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் உடன் கூடிய பஸ்ட் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு படக்குழுவினர் ’கஸ்டடி’ என்ற டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தில் நாக சைதன்யா காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்தசாமி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

ராகவா லாரன்ஸ் அடுத்த படம் டிராப்பா? படக்குழுவினர் விளக்கம்!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் துரைசெந்தில்குமார் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'அதிகாரம்' என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் டிராப் என நேற்று கிட்டத்தட்ட அனைத்து

வேகமாகப் பரவும் மெட்ராஸ் ஐ- தவிர்ப்பது எப்படி? எளிய மருத்துவக் குறிப்பு!

தமிழகத்தில் 'மெட்ராஸ் ஐ' எனப்படும் வெண்படல அழற்சி நோய் தொடர்ந்து 

நடிகை ராதாவின் நடனம்.. மகிழ்ச்சியில் முத்தமிட்ட 80s நடிகர்!

சமீபத்தில் 80s நடிகர்கள் ரியூனியன் கூடிய நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகை ராதா நடனம் ஆடியபோது மகிழ்ச்சியில் 80s நடிகர் ஒருவர் அவருக்கு முத்தமிட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குற்றவாளி கூண்டில் அசீம், வழக்கறிஞராக மாறி திணறடித்த விக்ரமன்.. நீதிபதி யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் தற்போது நீதிமன்றம் டாஸ்க் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நீதிமன்றத்தில் நீதிபதியாக ஏடிகே இருந்தார் என்பதும் விக்ரமன் மீது சுமத்தப்பட்ட வழக்கில் விக்கிரமனுக்கு ஆதரவாக ஷிவின்

நடிகை ஸ்ரீப்ரியாவின் வீட்டில் நிகழ்ந்த சோகம்.. திரையுலகினர் இரங்கல்

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் காலமானதை அடுத்து திரையுலகினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.