வெங்கட்பிரபு - நாக சைதன்யா படம் குறித்த மாஸ் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான ’மாநாடு’ திரைப்படம் கடந்த கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் வெங்கட் பிரபுவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிக்க இருப்பதாகவும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்க உள்ளதாக இயக்குனர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்க இருப்பதாகவும் அவர் மாஸ் தகவல் ஒன்றை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள போஸ்டரில் தெரிவித்துய்ள்ளார். இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தின் வில்லனாக பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நாகசைதன்யா போலீஸ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
With all ur love and blessings beginning my next #VP11 tomorrow with @chay_akkineni #NC22 @SS_Screens YES the shoot begins tomorrow @ilaiyaraaja @thisisysr pic.twitter.com/0ugXmSgDRD
— venkat prabhu (@vp_offl) September 20, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com