வெங்கட்பிரபு - நாக சைதன்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடித்து வந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சற்று முன் இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’கஸ்டடி’. காவல்துறை அதிகாரியாக நாக சைதன்யா நடித்து வரும் இந்த படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் இணைந்து இசை அமைத்து வருகின்றனர்.
தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படம் அடுத்த ஆண்டு மே 12ஆம் தேதி வெளியாகும் என வெங்கட்பிரபு சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்தசாமி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.
It's ??#Custody in theatres on May 12, 2023 ??#CustodyOnMay12??
— venkat prabhu (@vp_offl) December 28, 2022
A @vp_offl Hunt ??@chay_akkineni @IamKrithiShetty @thearvindswami@SS_Screens @srinivasaaoffl @realsarathkumar #Priyamani @Premgiamaren @VennelaKishore @srkathiir @rajeevan69 @abburiravi @TimesMusicSouth #VP11 pic.twitter.com/kOCKUlyRiB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com