வெங்கட்பிரபு, நாக சைதன்யா திடீர் மோதல்.. சமாதனம் செய்து வைத்த பிரேம்ஜி.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,April 20 2023]

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் நாக சைதன்யா திடீரென மோதிக் கொண்ட நிலையில் இருவரையும் பிரேம்ஜி சமாதானப்படுத்திய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகிய ’கஸ்டடி’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாளை ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ’கஸ்டடி’ படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சிஎஸ்கே ஜெர்சியை வெங்கட் பிரபுவும், ஹைதராபாத் ஜெர்சியை நாக சைதன்யாவும் அணிந்துள்ளனர். சிஎஸ்கே தான் வெற்றி பெறும் என்று வெங்கட் பிரபுவும், ஹைதராபாத் அணி தான் வெற்றி பெறும் என்று நாக சைதன்யாவும் கூறுகின்றனர்.

இந்த மோதலை தடுக்க பஞ்சாயத்து செய்ய வரும் பிரேம்ஜி, வெங்கட் பிரபுவிடம், ‘நடராஜ் விக்கெட் எடுத்தால் நீ சந்தோஷப்பட மாட்டாயா என்று கேட்க ’ஆம் சந்தோஷப்படுவேன்’ என்று கூறுகிறார். இதனை அடுத்து நாக சைதன்யாவிடம் ’தோனி சிக்சர் அடித்தால் நீ சந்தோஷப்பட மாட்டாயா? என்று கேட்க, ‘ஆம் சந்தோஷப்படுவேன்’ என்று கூறினார்.


இதையடுத்து இது சிஎஸ்கே வெர்சஸ் ஹைதராபாத் அல்ல, சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத், ஏனெனில் ’கஸ்டடி’ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது என்று கூறுகிறார். இந்த புரமோஷன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

More News

திரைப்படமாகும் வைரமுத்துவின் 'கள்ளிக்காட்டு இதிகாசம்': ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா?

கவிஞர் வைரமுத்து எழுதிய 'கள்ளிக்காட்டு இதிகாசம்' என்ற நாவல் திரைப்படமாக உருவாக இருப்பதாகவும் இந்த படத்தை பிரபல இயக்குனர் இயக்க இருப்பதாகவும் பிரபல நடிகர் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாக

திரைப்படங்களுக்கு இனி 5 வகையான சென்சார் சான்றிதழ்.. மத்திய அரசு புதிய சட்டம்..!

திரைப்படங்களுக்கு தற்போது யூ, யூஏ மற்றும் ஏ ஆகிய மூன்று வகை சென்சார் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி ஐந்து வகை சென்சார் சான்றிதழ்கள் வழங்கப்படும் என மத்திய அரசு

நாற்காலியில் வேற லெவலில் யோகா செய்யும் ரம்யா பாண்டியன்.. வைரல் வீடியோ..!

நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாற்காலியில் வேற லெவலில் யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.

பிரியா பவானிசங்கரின் நீச்சல்குள புகைப்படம்.. ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி..!

நடிகை பிரியா பவானி சங்கர் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள் கமெண்ட்ஸ்களை

'முந்தானை முடிச்சு' கிளாமர் டீச்சர் தீபா பாட்டியாகி விட்டாரா? பேரக்குழந்தையுடன்  க்யூட் புகைப்படங்கள்..!

கே. பாக்யராஜ் இயக்கி நடித்த 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தில் கிளாமர் டீச்சராக நடிப்பில் கலக்கிய நடிகை தீபாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.