வெங்கட்பிரபு, நாக சைதன்யா திடீர் மோதல்.. சமாதனம் செய்து வைத்த பிரேம்ஜி.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் நாக சைதன்யா திடீரென மோதிக் கொண்ட நிலையில் இருவரையும் பிரேம்ஜி சமாதானப்படுத்திய வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவாகிய ’கஸ்டடி’ என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நாளை ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ’கஸ்டடி’ படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் சிஎஸ்கே ஜெர்சியை வெங்கட் பிரபுவும், ஹைதராபாத் ஜெர்சியை நாக சைதன்யாவும் அணிந்துள்ளனர். சிஎஸ்கே தான் வெற்றி பெறும் என்று வெங்கட் பிரபுவும், ஹைதராபாத் அணி தான் வெற்றி பெறும் என்று நாக சைதன்யாவும் கூறுகின்றனர்.
இந்த மோதலை தடுக்க பஞ்சாயத்து செய்ய வரும் பிரேம்ஜி, வெங்கட் பிரபுவிடம், ‘நடராஜ் விக்கெட் எடுத்தால் நீ சந்தோஷப்பட மாட்டாயா என்று கேட்க ’ஆம் சந்தோஷப்படுவேன்’ என்று கூறுகிறார். இதனை அடுத்து நாக சைதன்யாவிடம் ’தோனி சிக்சர் அடித்தால் நீ சந்தோஷப்பட மாட்டாயா? என்று கேட்க, ‘ஆம் சந்தோஷப்படுவேன்’ என்று கூறினார்.
இதையடுத்து இது சிஎஸ்கே வெர்சஸ் ஹைதராபாத் அல்ல, சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத், ஏனெனில் ’கஸ்டடி’ தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகிறது என்று கூறுகிறார். இந்த புரமோஷன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
🧡+💛= #Custody has taken over #IPL2023 excitement 🔥
— Naga Chaitanya FC (@ChayAkkineni_FC) April 19, 2023
Yuvasamrat @chay_akkineni & @vp_offl cheering for clash of southern derby 🏏
Fun filled complete episode from tomorrow 🎬
#SRHvCSK #Custody #CustodyOnMay12#CustodyOnMay12 - https://t.co/1sIGM960wi pic.twitter.com/BGJGBRmntN
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments