close
Choose your channels

வெங்கட்பிரபுவு-எம்.ராஜேஷ் இணையும் படத்தின் ஹீரோ யார்?

Saturday, July 23, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு தற்போது 'சென்னை 600028' படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணியில் உள்ளார். இந்நிலையில் அவர் சிம்பு நடிப்பில் 'பில்லா 3' படத்தை இயக்கவுள்ளதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்ததும், அதற்கு சிம்பு அதே சமூக வலைத்தளத்தில் ஓகே சொன்னதும் தெரிந்ததே.
இந்நிலையில் 'கயல்' சந்திரன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க வெங்கட்பிரபு முடிவு செய்திருப்பதாகவும், இந்த படத்தின் இயக்குவது மட்டும்தான் அவர் என்றும், கதை மற்றும் திரைக்கதையை பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் எழுதவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தியுள்ளதால் எம்.ராஜேஷிடம் திரைக்கதை அமைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
எம்.ராஜேஷ் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடித்து வரும் 'கடவுள் இருக்குறான் குமாரு' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் முடிவடைந்ததும் அவர் வெங்கட்பிரபுவுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment