'தளபதி 68' படத்திற்காக சரியாக ஒரு வருடம் எடுத்துக்கொள்ளும் வெங்கட் பிரபு..!

  • IndiaGlitz, [Saturday,July 01 2023]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் திரைக்கதை அமைக்கும் பணியை இயக்குனர் வெங்கட் பிரபு முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும் ’லியோ’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸ் ஆன பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. அதாவது இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் ’தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு சுமார் 5 மாத காலம் நடைபெறும் என்றும் அதன் பிறகு தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் இந்த படத்தை ரிலீஸ் செய்ய பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.



ஆக மொத்தம் இந்த ஆண்டு அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்கும் ’தளபதி 68’ படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் ரிலீஸ் ஆகும் என்பதால் வெங்கட் பிரபு மற்றும் அவரது குழுவினர் இந்த படத்திற்காக ஒரு ஆண்டை முழுமையாக எடுத்துக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி தளபதி விஜய்யின் ’லியோ’ படம் வெளியாக இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு கிட்டத்தட்ட அதே தேதியில் தான் ’தளபதி 6’8 படமும் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும் இந்த படத்தில் நடிக்க மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.