ஆக்சன் பட ஹீரோவை கலாய்த்த வெங்கட் பிரபு.. சீரியஸாக காமெடி செய்த சி.எஸ்.அமுதன்..!

  • IndiaGlitz, [Sunday,March 10 2024]

ஆக்சன் படத்தில் அறிமுகமாகும் ஹீரோ ஒருவரை நமக்கு கடும் போட்டியாக இருப்பார் போல என இயக்குனர் வெங்கட் பிரபு கூறிய நிலையில் அதற்கு சிஎஸ் அமுதன் ’நமக்கு கிடைத்த இடத்தை சாதாரணமாக நினைக்க கூடாது, உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும், அப்போதுதான் இவங்களோட போட்டி போட முடியும்’ என சீரியசாக காமெடி செய்துள்ளதை எடுத்து இந்த இரண்டு பதிவுகளையும் பார்த்த ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து வருகின்றனர்.

தமிழில் உருவாகும் ’ரத்த பூமி’ என்ற படத்தில் அறிமுக நடிகர் ஒருவர் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்தின் ஹீரோ மற்றும் இயக்குனர் பேசும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது

கோலிவுட்டில் தளபதி என்ற இடம் காலியாக இருக்கும் நிலையில் என்னை பொருத்தவரை அடுத்த தளபதி இவர் தான் என்றும் ஆக்சன் ஹீரோ ஆவதற்கு அனைத்து தகுதிகளும் இவருக்கு உள்ளது என்றும் 'ரத்த பூமி’ படத்தின் இயக்குனர் பேசியுள்ளார்

இதனை அடுத்து ஹீரோ பேசியபோது ’படம் ஆரம்பிக்கும்போது, ஹீரோயின் ரயில்வே தண்டவாளத்தில் நடந்து வருகிறார். அப்போது ஒரு ட்ரெயின் வருது, அந்த ட்ரெயினை ஒரு விரலால் நிறுத்த வேண்டும் என்று இயக்குனர் கூறியதாகவும், அந்த ஒரு காட்சியை வைத்தே கதை ரொம்ப பிடித்து விட்டது என்றும் ஹீரோ கூறியுள்ளார்.

மேலும் அந்த படத்தின் வசனத்தையும் அவர் பேசிக் காட்டிய நிலையில் இந்த வீடியோவுக்கு தான் வெங்கட் பிரபு மற்றும் சிஎஸ் அமுதன் ஆகியோர் கலாய்த்து பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.