'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை.. வெங்கட்பட் என்ன சொன்னார் தெரியுமா?
- IndiaGlitz, [Tuesday,February 28 2023]
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக சமீபத்தில் மணிமேகலை தனது சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டவுடன் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே குக் வித் கோமாளி நான்காவது சீசனில் பாலா கோமாளியாக இல்லாததும் ஷிவாங்கி குக்காக மாறியதும் பார்வையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சீனியர் கோமாளியான மணிமேகலை மட்டுமே நிகழ்ச்சியை தூக்கி பிடித்த நிலையில் தற்போது அவரும் வெளியேறி இருப்பது நிகழ்ச்சிக்கு பெரும் பின்னடைவு என்று ரசிகர்களால் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மணிமேகலை வெளியேறியது குறித்து நெட்டிசன்கள் பலர் பலவிதமான வதந்திகளை பரப்பி வருகின்றனர். மணிமேகலை கர்ப்பமாகிவிட்டார் என்றும் மணிமேகலைக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் மணிமேகலைக்கும் குக் வித் கோமாளி நிர்வாகத்திற்கும் பிரச்சனை என்றும் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை வெளியேறியதன் உண்மையான காரணத்தை விரைவில் அவரே தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான வெங்கட் பட் மணிமேகலை வெளியேற்றம் குறித்து தனது சமூகவலைதளத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘மணிமேகலை நீங்கள் ஒரு சிறந்த கோமாளி மற்றும் நான் பார்த்த சிறந்த மனிதர்களில் ஒருவர். பிறவி நடிகராக இருந்து வரும் நீங்கள் பொழுதுபோக்காளராகவும் இருந்து வருகிறீர்கள். உங்களுடன் குக் வித் கோமாளி செட்டில் நான் சிறந்த நேரத்தை அனுபவித்தேன், அழகான நினைவுகளை என் வாழ்வில் உங்கள் மூலம் பெற்றேன். எப்போதும் நட்சத்திரமாக ஜொலித்து வரும் நீங்கள் எந்த துறையில் செல்கிறீர்களோ அந்த துறையில் சிகரத்தை அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். அனைத்து வாழ்த்துக்களும் உங்களுக்கு கிடைக்க இறைவன் உங்களுக்கு ஆசீர்வதிப்பார், இப்போது இருப்பது போல் பணிவான மனிதனாக இருக்க மட்டும் மறந்து விடாதீர்கள்’ என்று உருக்கமாக பதிவு செய்துள்ளார்.
வெங்கட் பட் அவர்களின் இந்த பதிவுக்கு மணிமேகலை தனது நன்றியை தெரிவித்துள்ளார். ஒரு செஃப் என்பதையும் தாண்டி ஒரு ஊக்கம் அளிக்கும் பேச்சாளராக நான் உங்களை கருதி வருகிறேன் என்றும் உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.