குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வேட்பாளாராக வெங்கையா நாயுடு அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,July 18 2017]

இந்திய குடியரசு தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்தது. பதிவான வாக்குகள் வரும் 20ஆம் தேதி டெல்லியில் எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் துணை குடியரசு தலைவர் தேர்தலுக்கான பரபரப்பு அரசியல் கட்சிகள் இடையே தற்போது ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே எதிர்க்கட்சிகள் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபாலகிருஷ்ண காந்தி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தனக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்த நிலையில் பாஜக வேட்பாளராக நேற்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ள வெங்கையா நாயுடு இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெங்கையா நாயுடு துணை குடியரசு தலைவராக அறிவிக்கப்பட்டவுடன், தமிழக முதல்வர் ஈபிஎஸ், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோர்களிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆதரவு தரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.