வெங்கட்பிரபுவின் புதிய அவதாரம்

  • IndiaGlitz, [Tuesday,July 19 2016]

பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கி வரும் 'சென்னை 600028' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்திற்காக யுவன்ஷங்கர்ராஜா ஆறு பாடல்களை கம்போஸ் செய்துள்ளார். இந்த பாடல்களில் ஒரு முக்கிய பாடலை இயக்குனர் வெங்கட்பிரபுவே எழுதியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
'16 வயதினிலே' படத்தில் இடம்பெற்ற 'செந்தூரப் பூவே' உள்பட பல பாடல்களை கங்கை அமரன் எழுதியுள்ள நிலையில் அவரது மகன் வெங்கட்பிரபு இந்த படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெய், சிவா, பிரேம்ஜி அமரன், நிதின் சத்யா, விஜய் வசந்த், வைபவ் ரெட்டி, மகத், விஜயலட்சுமி உள்ளிட்ட முதல் பாகத்தில் நடித்த பலரும் இந்த இரண்டாவது பாகத்திலும் நடித்துள்ளனர். வெங்கட்பிரபுவின் பிளாக் டிக்கெட் கம்பெனி தயாரிக்கும் இந்த படத்திற்கு ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவும், ப்ரவீண் கே.எல் படத்தொகுப்பு பணியும் செய்கின்றனர். இந்த படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'தர்மதுரை' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் சீனுராமசாமி இயக்கி வந்த 'தர்மதுரை' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் ...

சிவாஜி கணேசன் - மோகன்லால் படத்தின் ரிலீஸ் தேதி

கடந்த 1997ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மலையாள திரைப்படம் 'ஒரு யாத்ரா மொழி. மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் சிவாஜி கணேசன்...

'கபாலி'க்காக விடுமுறை அறிவித்த முன்னணி இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கோலிவுட் திரையுலகில் பெரிய நடிகர்கள் முதல் சிறிய நடிகர்கள் வரையிலும், டெக்னீஷியன் லெவலில் இயக்குனர்கள்...

தனுஷ்-சிவகார்த்திகேயன்-விஜய்சேதுபதியை இணைத்த கே.எஸ்.ரவிகுமார்

கோலிவுட் திரையுலகின் சீனியர் இயக்குனரான கே.எஸ்.ரவிகுமார் தற்போது 'முடிஞ்சா இவனப் புடி' என்ற படத்தை இயக்கியுள்ளார்..

'கபாலி'யுடன் இணைந்த 'தனி ஒருவன்'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' படத்தின் ஜூரம் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு பரவியுள்ள நிலையில்...