சேரனை அழைத்து வாருங்கள் விஜய்சேதுபதி: ஒரு இயக்குனரின் வேண்டுகோள்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் சேரனை சரவணன் மரியாதைக்குறைவாக பேசியதும், கமல் அறிவுரைக்கு பின்னர் சேரனிடம் சரவணன் மன்னிப்பு கேட்டதும் முடிந்து போன விஷயமாக கருதப்படுகிறது. ஆனால் திரையுலகில் சிலர் இன்னும் இந்த விஷயத்தை விடுவதாக இல்லை. ஏற்கனவே இயக்குனர் வசந்தபாலன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்' என்று தனது முகநூலில் பதிவு செய்த நிலையில் தற்போது ஒரு இயக்குனர் சேரனை விஜய் சேதுபதி வெளியே அழைத்துவர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்
'வெங்காயம்' என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் இவர் இதுகுறித்து கூறியதாவது: பிக்பாஸ் வீட்டிற்கு விஜய்சேதுபதி சொன்னதால் தான் வந்தேன் என்று சேரன் சில நாட்களுக்கு முன் கூறினார். அதன்படி சேரனுக்கு ஒரு அவமானம் ஏற்பட்டிருக்கிற போது பிக்பாஸ் வீட்டிற்குச் சென்று விஜய்சேதுபதிதான் அவரை அழைத்து வரவேண்டும். இல்லாவிட்டால் சேரன் மீது மரியாதை வைத்திருக்கும் என்னைப் போன்ற சிலர் ஒன்று சேர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரை வெளியே அழைத்து வருவதைத் தவிர வேறு வழியில்லை என்று சங்ககிரி ராஜ்குமார் அதிரடியாக தெரிவித்துள்ளார்
மேலும் சேரன் ஒரு நல்ல கலைஞர் என்றும், அவருடைய படைப்புகள் உன்னதமானவை என்றும், அவருக்கு ஏற்பட்ட ஒரு துன்பம் தமிழக மக்களுக்கு ஏற்பட்ட ஒரு துன்பமாக பார்க்கப்படுகிறது என்றும் கூறிய சங்ககிரி ராஜ்குமார், பிக்பாஸ் ஒரு ரியாலிட்டி ஷோ என்று கூறப்பட்டாலும் பார்க்கின்ற மக்கள் அதை உண்மை என்றே நம்பி வருகிறார்கள் என்றும் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் ஒரு கலைஞனை ஒரு பெண் தன் தவறாக தொட்டார் என்று குற்றம்சாட்டுவதும், இன்னொரு நடிகர் வாடா போடா என்று பேசுவதையும் ஏற்று கொள்ள முடியாது என்றும், இதெல்லாம் ஒரு சாதாரண மனிதனுக்கு ஏற்பட்டாலே மிகப்பெரிய அவமானமாக கருத வேண்டியிருக்கும் நிலையில், ஒரு கலைஞன் இந்த அவமானங்களால் அனுபவித்து கொண்டிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாகவும் சங்ககிரி ராஜ்குமார் மேலும் தெரிவித்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com