என்னைக் கொல்ல சதி நடக்கிறது– ட்ரம்ப் மீது பரபரப்பு புகார் கூறிய இன்னொரு நாட்டு அதிபர்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
வெனிசுலா நாட்டின் அதிபரான நிக்கோலஸ் மதுரோ தன்னைக் கொல்ல அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டு இருப்பதாக குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து வெனிசுலா அதிபர் கூறும்போது நாட்டில் நிலவும் பல்வேறு குழப்ப நிலைக்கு அமெரிக்காவே முழுபொறுப்பு. என்னையும் கொல்ல சதி நடக்கிறது எனக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
வெனிசுலா எண்ணெய் வளம் மிகுந்த நாடு. அதைப்போலவே அரசியல் குழப்பங்களுக்கும் அங்கு பஞ்சமில்லை. தற்போது கொரோனா பரவலால் மேலும் பொருளாதார நெருக்கடி, அரசியல் குழப்பங்களும் அதிகரித்து இருக்கின்றன. இந்நிலையில் அதிபர் நிக்கோலஸ் ட்ரம்ப் மீது குற்றம் சாட்டியிருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
”நான் மிகவும் மிருகத்தனமான ஆக்கிரமிப்புக்கு பலியாகினேன். அமெரிக்க அரசு என் தலைக்கு 15 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.109 கோடியே 7 லட்சத்து 92 ஆயிரம்) வழங்கியிருக்கிறது. என்னை கொலை செய்ய ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் என்னை கொல்ல வெனிசுலாவின் துப்பாக்கி சுடும் வீரர்களை முயற்சிக்கிறார்கள். என்னை கொல்லும் கூலிப்படையை ட்ரம்ப் தேடிக் கொண்டிருக்கிறார்” என அதிபர் நிக்கோலஸ் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
முன்னதாக வெனிசுலாவில் போதைப் பொருட்கள் அதிகளவு கடத்தப்படுகிறது. இக்குற்றத்தில் அதிபர் உள்ளிட்ட அந்நாட்டு அமைச்சரவையில் பலருக்கும் தொடர்பு இருக்கிறது. இதுதொடர்பாக வெனிசுலா அதிபர் உட்பட 14 பேரை கைது செய்ய உதவி வேண்டும். இதற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர் சன்மானம் வழங்கப்படும் எனவும் ட்ரம்ப் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இதுபோன்று வெனிசுலாவின் பல விவகாரங்களில் அமெரிக்கா தொடர்ந்து அதிகாரம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் அதிபரை கொலை செய்ய சதி நடக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments