இந்தியாவை பின்பற்றி பணத்தை திரும்ப பெற்ற வெனிசுலாவில் பயங்கர கலவரம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த மாதம் 8ஆம் தேதி பாரத பிரதமர் நரேந்திரமோடி ரூ.500, ரூ.1000 செல்லாது என்று அதிரடியாக அறிவித்தார். இந்த அறிவிப்பால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். எதிர்க்கட்சிகளின் போராட்டத்தால் பாராளுமன்றமே ஸ்தம்பித்தது. சுமார் 100 பேர்களுக்கும் மேல் வங்கி மற்றும் ஏடிஎம் வரிசையில் நின்று மரணம் அடைந்தனர். இருப்பினும் பெரிய ஆர்ப்பாட்டங்களோ, போராட்டமோ கலவரமோ இந்தியாவின் எந்த பகுதியிலும் நடைபெற்றதாக செய்திகள் இல்லை.
இந்நிலையில் இந்தியாவை பின்பற்றி வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் அந்நாட்டின் பொலிவர் என்ற கரன்சி பணத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தார். கச்சா எண்ணெயை ஆதாரமாக கொண்டிருக்கும் இந்நாடு கடந்த சில ஆண்டுகளாக கச்சா எண்ணெய் வீழ்ச்சியால் பணத்தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றது. அமெரிக்க டாலருக்கு இணையான வெனிசூலா கரன்சி கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் வெனிசுலா நாட்டில் உணவு பொருள் தட்டுப்பாடு, கடத்தல், உள்ளிட்டவைகளுக்கு எதிராக போராடும் நோக்கில் 100 பொலிவர் கரன்சியை திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்தார். இந்த 100 பொலிவர் கரன்ஸிதான் அந்நாட்டில் 77% பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்தியாவை போல அந்நாட்டு மக்கள் அமைதியாக இருக்கவில்லை. பணத்தை திரும்ப பெறும் அறிவிப்பை அறிவித்த அதிபருக்கு எதிராக மக்களே களத்தில் இறங்கி போராடி வருகின்றனர். அதிபர் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒருகட்டத்தில் இந்த போராட்டம் கலவரமாகவும் வெடித்துள்ளதால் அந்நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout