'வெந்து தணிந்தது காடு' நாயகியின் அடுத்த படம்: ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா?

சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக சித்தி இட்னானி அறிமுகமானார் என்பதும், அவரது முதல் தமிழ்ப்படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் நாயகி சித்தி இட்னானி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்யாவின் 34வது படத்தில் தான் அவர் நாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் ஆர்யா, சித்தி இட்னானி உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ‘விருமன்’ உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சந்தானம் நடித்த 'ஏஜண்ட் கண்ணாயிரம்': படக்குழுவினர் வெளியிட்ட 2 நிமிட செம வீடியோ!

நடிகர் சந்தானம் கடந்த சில ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'ஏஜென்ட் கண்ணாயிரம்'. 

'தளபதி 67' கெட்டப் இதுதானா? வேற லெவலில் விஜய்யின் மாஸ் புகைப்படம்!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் செய்திகளை விட 'தளபதி 67' படத்தின் செய்திகள்தான் அதிகம் வெளிவந்து

இன்று 'பிரின்ஸ்' டிரைலர், இதே நாளில் தான் அந்த சம்பவம் நடந்தது: சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாக இருக்கும் நிலையில் இதே நாளில்தான் தன்னுடைய 'டாக்டர்' என்ற வெற்றி படம் வெளியானது என்று நடிகர் சிவகார்த்திகேயன்

பிக்பாஸ் தமிழ் சீசன் 6.. முதல் ஆர்மி யாருக்கு தெரியுமா?

பிக்பாஸ் தமிழ் சீசன் 6 இன்று தொடங்கவிருக்கும் நிலையில் இந்த சீசனில் போட்டியாளர்களாக ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ஷிவின் கணேசன், ராபர்ட், ஷெரினா, ராம் ராமசாமி, ஆர்யன் தினேஷ் என்ற ஏடிகே, ஜனனி

திருமணத்திற்கு பின் நயன்தாரா வெளியிட்ட முதல் அறிக்கை: என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்துகொண்ட நிலையில் திருமணத்திற்கு பின்னர் அவர் முதன்முதலாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.