'வெந்து தணிந்தது காடு' நாயகியின் அடுத்த படம்: ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையில் உருவான ’வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக சித்தி இட்னானி அறிமுகமானார் என்பதும், அவரது முதல் தமிழ்ப்படமே சூப்பர் ஹிட் படமாக அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் நாயகி சித்தி இட்னானி நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்யாவின் 34வது படத்தில் தான் அவர் நாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது என்பதும் இந்த பூஜையில் ஆர்யா, சித்தி இட்னானி உள்பட பலர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான ‘விருமன்’ உள்பட பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தை டிரம்ஸ்டிக் புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
With the blessings of the almighty, here’s the next one ??✨ #Arya34
— Siddhi Idnani (@SiddhiIdnani) October 9, 2022
Need all your prayers ✨??✨??@arya_offl @SiddhiIdnani @dir_muthaiya @VelrajR @gvprakash #AnalArasu @DrumsticksProd @ZeeStudiosSouth @TeamAimPR @arunprajeethm pic.twitter.com/cMkjUC7SNM
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments