close
Choose your channels

சிம்புவின் வெந்து தணிந்தது காடு: ரிலீசுக்கு 20 நாட்கள் இருக்கும் நிலையில் தொடரும் படப்பிடிப்பு!

Wednesday, August 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 15 என அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இதற்கான பிரமாண்டமான அரங்கு தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் ரிலீஸ் தேதிக்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது லக்னோவில் இந்த படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சண்டை காட்சியை ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் லீ விடாகர் இயக்கி வருவதாகவும் சிம்பு மற்றும் வில்லன்கள் மோதும் அதிரடியான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

லக்னோவில் நடைபெறும் இந்த படப்பிடிப்புடன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து விடும் என்று கூறப்படுகிறது. ரிலீசுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கையில் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தாலும், இந்த படத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் மற்றும் டப்பிங் பணிகள் அனைத்தும் ஏற்கனவே முடிவடைந்து விட்டதாகவும் தற்போது படமாக்கப்படும் ஸ்டண்ட் காட்சிகள் மட்டும் படத்தில் இணைக்க வேண்டும் என்பது மட்டுமே ஒரே ஒரு பணி என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்

எனவே ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் ரிலீஸ் தேதியில் எந்தவிதமான மாற்றமும் இருக்காது என்றும் திட்டமிட்டபடி செப்டம்பர் 15ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment