'வெந்து தணிந்தது காடு' ஆடியோ விழாவில் இத்தனை பிரமாண்டமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சிம்பு நடித்த ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத அளவில் இந்த ஆடியோ ரிலீஸ் விழா மற்றும் டிரைலர் ரிலீஸ் விழா மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் இந்த விழாவில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் மிகப்பெரிய அளவில் திட்டமிடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
செப்டம்பரில் சென்னையில் நடைபெறவிருக்கும் இந்த ஆடியோ விழாவில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் அவர்கள் நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவும் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது. அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்படுவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
’வெந்து தணிந்தது காடு’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்தே பிரம்மாண்டமாக ஆடியோ ரிலீஸ் விழாவை நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், இந்த ஆடியோ விழா முடிந்த பின்னர் இந்த படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமின்றி மேலும் சில முக்கிய பிரமுகர்களையும் இந்த ஆடியோ விழாவில் சிறப்பு விருந்தினராக அழைக்க திட்டமிடப்பட்டு இருப்பதாகவும், கிட்டத்தட்ட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளும் விழாவாக இந்த ஆடியோ மற்றும் ட்ரெய்லர் ரிலீஸ் விழா இருக்கும் கூறப்படுகிறது .
மொத்தத்தில் ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஆடியோ விழா தமிழ் திரை உலகின் பிரம்மாண்டமான விழாவாக இருக்கும் என்று படக்குழுவினர் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout