close
Choose your channels

வாங்கோ வாத்தியாரே நாமளும் ஊர சுத்தி வரலாம்: பதிலடி கொடுத்த வேம்புலி!

Tuesday, August 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய ‘சார்பாட்டா பரம்பரை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் குறித்த மீம்ஸ் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கபிலன் தனது வாத்தியார் ரங்கனை சைக்கிளில் அழைத்துச் செல்வது போல் படத்தில் இருந்த காட்சியை வைத்து மீம்ஸ்களை மீம்ஸ் கிரியேட்டர்கள் பதிவு செய்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ‘சார்பாட்டா பரம்பரைக்கு போட்டியாக தற்போது இடியாப்ப பரம்பரையும் சைக்கிள் மீம்ஸை கையில் எடுத்துள்ளது.

இடியாப்ப பரம்பரையைச் சேர்ந்த வேம்புலி தனது வாத்தியார் துரைக்கண்ணுவை சைக்கிளில் அழைத்து செல்லும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது, இந்த புகைப்படத்தை வேம்புலி கேரக்டரில் நடித்திருந்த ஜான்கொக்கன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து, ‘வாங்கோ வாத்தியாரே நாமளும் ஊர சுத்தி வரலாம்’ என்று பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்தை வைத்து மீண்டும் மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். அதேபோல் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட்ஸ்களும் ஜாலியாக பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

‘சார்பாட்டா பரம்பரை’ படத்தில்தான் இடியாப்ப பரம்பரையும், ‘சார்பாட்டா பரம்பரையும் மோதிக் கொண்டார்கள் என்றால் மீம்ஸ்களிலும் மோதிக்கொள்வது நகைச்சுவையின் உச்சகட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment