close
Choose your channels

பாடகராகும் மற்றொரு பிரபல நடிகர்

Sunday, September 6, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டில் தற்போது நடிகர்கள் பாட்டு பாடுவதும், பாட்டு பாடும் பாடகர்கள் நடிக்க வருவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இளையதளபதி விஜய் முதல் பல நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் ஒரே ஒரு பாடலையாவது பாடும் வழக்கத்தை கொண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு நடிகரும் பாடகராக விரும்பியுள்ளாராம். அவர்தான் பல வெற்றி படங்களை கொடுத்த இளம் நடிகர் விமல்

தற்போது மாப்ளே சிங்கம், அஞ்சல ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் விமல், பாடகராக மாற விரும்பி முறைப்படம் சங்கீதம் படிக்க உள்ளாராம். இதுகுறித்து அவரே கூறியபோது, 'நான் கூத்துப்பட்டறையில் நடிப்பு பழகும்போதே இசையையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினேன். தற்போது படங்களில் பாட வேண்டும் என்று ஆசையிருந்தாலும் முறைப்படி இசையை கற்றுவிட்டு அதன்பின்னர் பாட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.

மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரபல இசை மேதை வெங்கட்ராமன் மாஸ்டரிடம் இசை பயின்று வருகிறேன். இசையமைப்பாளர் ரகுநாதன் தான் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி இசை வகுப்பில் சேர்த்து கொள்ள உதவி செய்தார்' என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக இசை வகுப்பிற்கு சென்று கொண்டிருக்கும் விமல், அடுத்து பூபதிபாண்டியன் இயக்கத்தில் நடிக்கவுள்ள புதிய படத்தில் ஒரு பாடலை பாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment