பாடகராகும் மற்றொரு பிரபல நடிகர்

  • IndiaGlitz, [Sunday,September 06 2015]

கோலிவுட்டில் தற்போது நடிகர்கள் பாட்டு பாடுவதும், பாட்டு பாடும் பாடகர்கள் நடிக்க வருவதும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இளையதளபதி விஜய் முதல் பல நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களில் ஒரே ஒரு பாடலையாவது பாடும் வழக்கத்தை கொண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் மற்றொரு நடிகரும் பாடகராக விரும்பியுள்ளாராம். அவர்தான் பல வெற்றி படங்களை கொடுத்த இளம் நடிகர் விமல்

தற்போது மாப்ளே சிங்கம், அஞ்சல ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கும் விமல், பாடகராக மாற விரும்பி முறைப்படம் சங்கீதம் படிக்க உள்ளாராம். இதுகுறித்து அவரே கூறியபோது, 'நான் கூத்துப்பட்டறையில் நடிப்பு பழகும்போதே இசையையும் கற்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தினேன். தற்போது படங்களில் பாட வேண்டும் என்று ஆசையிருந்தாலும் முறைப்படி இசையை கற்றுவிட்டு அதன்பின்னர் பாட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளேன்.

மேற்கு மாம்பலத்தில் உள்ள பிரபல இசை மேதை வெங்கட்ராமன் மாஸ்டரிடம் இசை பயின்று வருகிறேன். இசையமைப்பாளர் ரகுநாதன் தான் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி இசை வகுப்பில் சேர்த்து கொள்ள உதவி செய்தார்' என்று கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக இசை வகுப்பிற்கு சென்று கொண்டிருக்கும் விமல், அடுத்து பூபதிபாண்டியன் இயக்கத்தில் நடிக்கவுள்ள புதிய படத்தில் ஒரு பாடலை பாடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

More News

'விஜய் 59' இயக்குனரின் அடுத்த புதிய முயற்சி

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக இருந்து அதன்பின்னர் 'ராஜா ராணி' என்ற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் அட்லிக்கு

எஸ்.எஸ்.ராஜமவுலியின் அடுத்த படம் 'நான்ஈ 2'?

இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம், தென்னிந்தியாவின் அதிக வசூல் செய்த படம் போன்ற பல பெருமைகளை பெற்ற 'பாகுபலி' படத்தை...

'தல 56' தாமதத்திற்கு ஸ்ருதிஹாசன் காரணமா?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் கிளைமாக்ஸ் ஆக்சன் காட்சிகளின் படப்பிடிப்புகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில்...

சூப்பர் ஸ்டார் ரஜினி கேரக்டரில் கார்த்திக்?

கடந்த 80 மற்றும் 90களில் கோலிவுட்டின் முக்கிய நாயகர்களில் ஒருவராக விளங்கிய நவரச நடிகர் கார்த்திக் நீண்ட இடைவெளைக்கு பின்னர் ரீ எண்ட்ரி ஆன...

சந்தானம் ஹீரோவாக நடித்த 'வாலிப ராஜா' ரிலீஸ் தேதி?

சந்தானம் தயாரிப்பில் அவரே ஹீரோவாக நடித்த 'இனிமே இப்படித்தான்' திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து சந்தானம் மீண்டும் ஹீரோவாக நடித்திருக்கும்...