விமல் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில்!

  • IndiaGlitz, [Tuesday,July 23 2019]

விமல் நடித்த 'களவாணி 2' திரைப்படம் சமீபத்தில் வெளியாகிய நிலையில் அவர் தற்போது 'சண்டக்காரி' என்ற படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'மை பாஸ்' என்ற படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.

இந்த நிலையில் விமல் ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 'சோழ நாட்டான்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் ரஞ்சித் கண்ணன் என்பவர் இயக்கவுள்ளார். கிராமத்து கதையம்சம் கொண்ட இந்த படம் ஒரு ஆக்சன் திரில்லர் படம் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு தஞ்சை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பகுதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், வரும் ஆகஸ்ட் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்த படத்தின் நாயகி இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என்றும், இருப்பினும் இந்த படத்தில் விஜய்டிவி புகழ் ராமர், பழைய ஜோக் தங்கதுரை உள்ளிட்ட சில நடிகர்கள் நடிக்க உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தை ஹாரிஸ் புரடொக்சன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளது. நட்சத்திர பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யவுள்ள இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.