close
Choose your channels

பிரபல வெற்றிப்பட இயக்குனரின் படத்தில் விமல்-வடிவேலு

Saturday, April 28, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த ஜனவரி மாதம் வெளியான 'மன்னார் வகையறா' படத்தின் வெற்றியால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ள நடிகர் விமல், தற்போது சற்குணம் இயக்கத்தில் 'களவாணி 2 மற்றும் முத்துகுமரன் இயக்கும் கன்னிராசி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பிரபல இயக்குனர் சுராஜ் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விமல் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் விமலுடன் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும், இருவரும் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

காமெடி காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்த படத்தில் விமல், வடிவேலு போலீஸ் காட்சிகள், அர்ஜூன் மற்றும் வடிவேலு நடித்த 'மருதமலை' காமெடி காட்சிகளுக்கு இணையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment