close
Choose your channels

குரலே இல்லாதவங்க கேள்வி கேட்கணும்ன்னா...'வெல்வெட் நகரம்' டிரைலர் விமர்சனம்

Friday, November 23, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை வரலட்சுமி நடித்த 'வெல்வெட் நகரம்' படத்தின் டிரைலரை சற்றுமுன் நடிகர் தனுஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பத்திரிகையாளராக வரலட்சுமி நடித்துள்ள இந்த படத்தில் அரசும், கார்ப்பரேட் நிறுவனமும் இணைந்து செய்த ஒரு சதியை கண்டுபிடிக்க முயற்சி செய்ய அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைதான் கதை என டிரைலரில் இருந்து தெரிகிறது.

'சண்டக்கோழி 2' மற்றும் 'சர்கார்' படங்களில் வில்லியாக நடித்த வரலட்சுமி இந்த படத்தில் பத்திரிகையாளர் கேரக்டரில் மிரட்டியுள்ளார். ஆக்சன் காட்சியிலும் அசத்தியுள்ளார். 'குரலே இல்லாதவங்களுக்கு கேள்வி கேட்குற அளவுக்கு குரல் வரணும்ன்னா, அதுக்கு முதல்படி கல்விதான் என்ற வசனம் சிந்திக்க வைக்கின்றாது.

சுமார் இரண்டு நிமிட டிரைலரில் ஆக்சன், த்ரில் காட்சிகள் அதிகம் இருப்பதால் முழுப்படத்திலும் அதிரடி ஆக்சன் காட்சிகள் அதிகம் இருக்கும் என ஏதிர்பார்க்கப்படுகிறது.

அச்சு ராஜாமணியின் அசத்தலான பின்னணி இசை டிரைலரின் த்ரில் காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது. பகவத் குமாரின் கேமிரா மிரட்டியுள்ளது. மொத்தத்தில் ஒரு த்ரில் படத்தை இயக்குனர் மனோஜ்குமார் நடராஜன் வழங்கவுள்ளார் என்பது உறுதியாக இந்த டிரைலரின் மூலம் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment