20 வருடங்களுக்கு பின் 2ஆம் பாகமாகும் வேலுபிரபாகரன் படம்

  • IndiaGlitz, [Thursday,September 07 2017]

கோலிவுட் திரையுலகில் சூப்பர் ஹிட் ஆன பழைய படங்கள் இரண்டாம் பாகமாக உருவெடுக்கும் டிரெண்ட் கடந்த சில வருடங்களாக உள்ளது. தற்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்கள் உள்பட பல திரைப்படங்கள் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் நிலையில் மேலும் ஒரு இரண்டாம் பாக படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது

கடந்த 1997ஆம் ஆண்டு இயக்குனர் வேலுபிரபாகரன் நடித்து இயக்கிய திரைப்படம் 'கடவுள்'. இந்த படம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் வசூல் அளவில் ஓரளவு வெற்றி பெற்ற படம். இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு பின் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 'கடவுள் 2' என்ற பெயரில் இயக்க வேலுபிரபாகரன் திட்டமிட்டுள்ளார்.

மேலும் இன்று அவர் 'கடவுள் 2' படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 'ஆணைகளிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை' என்ற வரிகளுடன் இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது. இசைஞானி இளையராஜா இசையில் உருவாகும் இந்த படத்தை சிட்டிபாபு என்பவர் தயாரிக்கின்றார். 

60 வயதான வேலுபிரபாகரன் சமீபத்தில் 35 வயது ஷெர்லி என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவருடைய படமும் சர்ச்சையை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

மக்களுக்கு நல்ல செய்ய கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்: விஷால்

அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியல் கோலிவுட் திரையுலகினர் கையில் தான் உள்ளது.

விவாதங்களை துப்பாக்கியால் வெல்ல முயற்சி செய்யலாமா? கமல்ஹாசன்

நேற்று முன் தினம் இரவு பெங்களூரில் முத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்

விஜய் ஆண்டனியின் 'காளி'யில் நடிக்கும் 4 ஹீரோயின்கள் யார் யார்?

விஜய் ஆண்டனி நடித்து வரும் 'அண்ணாதுரை' மற்றும் 'காளி' ஆகிய இரண்டு படங்களின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் ஒரே நாளில் வெளியானது

அனிதா குடும்பத்திற்கு தற்போது தேவை நிதியல்ல, நீதி: நடிகர் ஆனந்த்ராஜ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலகியுள்ள நடிகர் ஆனந்த்ராஜ் அவ்வப்போது ஆட்சியாளர்களின் குறைகளை சுட்டிக்காட்டி வருகிறார்.

நீட் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க மறுத்த வேலூர் சி.எம்.சி

இந்த ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வின் அடிப்படையில் தான் சேர்க்கப்பட வேண்டும்..