வேலுபிரபாகரனுக்கு ரஜினி உதவியது உண்மையா? இதோ ஒரு விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சமீபத்தில் பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக அனைத்து அரசியல் தலைவர்களும் குற்றம்சாட்டிய நிலையில் இதுகுறித்து நடிகரும், நடன இயக்குனரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

அந்த அறிக்கையில் ’பெரியார் மீது ரஜினிகாந்த் மிகுந்த மரியாதை வைத்திருப்பவர் என்றும் அவர் பெரியாரை அவமதிக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறினார் என்றும் பெரியாரின் கருத்துக்களைக் கொண்டு வேலு பிரபாகரன் இயக்கிய திரைப் படத்தை ரிலீஸ் செய்ய ரஜினிகாந்த் தான் மிகப் பெரிய தொகை கொடுத்து உதவியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த வேலு பிரபாகரன் அவர்கள் ’தான் பெரியாரின் கொள்கைகளை தன்னுடைய படத்தில் கூறி வருவதாகவும் ஆனால் தனக்கு பெரியாரின் கொள்கைகளை கடைபிடிப்பவர்களே உதவி செய்யவில்லை என்றும் கூறினார்.

தான் இயக்கிய படம் ஒன்று ரிலீஸ் செய்ய முடியாமல் இருந்த போது ரஜினிகாந்த் தன்னை அழைத்து ரூபாய் 5 லட்சம் கொடுத்து உதவியதாகவும் பெரியார் ஆதரவாளர்களே தனக்கு உதவாத போது ஆன்மீக கொள்கை கொண்ட ரஜினிகாந்த் உதவியது தனக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகவும் கூறியுள்ளார் இதிலிருந்து ராகவாலாரன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது உண்மை என்பது புரிய வருகிறது.
 

More News

பா ரஞ்சித் படத்தில் மகிழ்திருமேனி நடிக்கிறாரா? பரபரப்பு தகவல் 

மகிழ்திருமேனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'தடம்' என்ற திரைப்படம் சூப்பர்ஹிட் ஆன நிலையில் அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம் ஒன்றை மகிழ்திருமேனி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கருணாநிதி வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க இல்லை: உதயநிதி 

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி; திரைப்படம் உருவாகி வருகிறது என்பதும் அவருடைய வாழ்க்கை வரலாறு தொலைக்காட்சி

3,000 ஆண்டு பழமை வாய்ந்த எகிப்து மம்மியின் குரல் செயற்கையாக உருவாக்கம் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

3.000 ஆண்டு பழமையான ஒரு எகிப்து மதக் குருவின் 'குரல்' விஞ்ஞானிகளின் முயற்சியால் செயற்கையாக உருவாக்கப் பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட புதிய லோகோ; நெட்டிசன்கள் கிண்டல்

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்க விண்வெளி படையின் புதிய லோகோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நாளை விஜய்-விஜய்சேதுபதி லுக்: அட்டகாசமான தகவல்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிவரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது