வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Monday,September 23 2024]

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ், பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்துள்ள நிலையில், அவர் தயாரித்த படங்களில் ஒன்றான 'சுமோ' படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டில் முடிவடைந்தது. ட்ரெய்லரும் வெளியான நிலையில், நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது தான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோசினோரி தசீரோ, விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை ஹோசிமின் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையில், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில், பிரவீன் படத்தொகுப்பில் உருவான இந்த படம், அக்டோபரில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

2025 புத்தாண்டு ராசிபலன்: துலாம் முதல் மீனம் வரை!

பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், வருகின்ற 2025-ம் ஆண்டில்

மணிமேகலை - பிரியங்கா விவகாரத்துல நாம தான் முட்டாள்: கேபிஒய் சரத்

மணிமேகலை மற்றும் பிரியங்கா விவகாரம் குறித்து ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் கடந்த சில நாட்களாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில்,

2025 புத்தாண்டு ராசிபலன்: மேஷம் முதல் கன்னி வரை

பிரபல ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில்,

அட்லியும் இல்லை.. 'சூர்யா 45' படத்தின் இயக்குனர் இந்த நகைச்சுவை நடிகரா?

சூர்யாவின் 45வது திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்குவார் என்றும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் சில மணி நேரங்களுக்கு முன் தகவல் வெளியாகி

சென்னையின் முக்கிய பகுதிக்கு எஸ்பிபி நகர் என்ற பெயர்.. முதல்வர் அலுவலகத்தில் மனு..!

சென்னையில் உள்ள முக்கிய பகுதிக்கு மறைந்த பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியம் நகர் என்று பெயர் வைக்க முதல்வர் அலுவலகத்தில் எஸ்பிபி சரண் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.