வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரித்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் ஐசரி கணேஷ், பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்துள்ள நிலையில், அவர் தயாரித்த படங்களில் ஒன்றான 'சுமோ' படத்தின் படப்பிடிப்பு 2019ஆம் ஆண்டில் முடிவடைந்தது. ட்ரெய்லரும் வெளியான நிலையில், நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது தான் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோசினோரி தசீரோ, விடிவி கணேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை ஹோசிமின் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையில், ராஜீவ் மேனன் ஒளிப்பதிவில், பிரவீன் படத்தொகுப்பில் உருவான இந்த படம், அக்டோபரில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, புதிய போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Prepare for a Hilarious🤩 Fun(War)Fare for this October!
— Vels Film International (@VelsFilmIntl) September 23, 2024
🇮🇳 X 🇯🇵
Namma Agila Ulaga Superstar Mirchi Shiva 💥 and Dashing SUMO ⛩️ are all set to enthrall you!@IshariKGanesh @VelsFilmIntl@actorshiva @priyaanand @DirRajivMenon @sphosimin @cinemainmygenes @nivaskprasanna… pic.twitter.com/FvLNOFgEDD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com