பாடலாசிரியர் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம்.. ஹீரோ, ஹீரோயின் யார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தமிழ் திரைப்பட நிறுவனம் வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், சற்றுமுன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபல பாடலாசிரியர் ஒருவர் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் ஜீவா மற்றும் ராஷி கண்ணா நாயகன் மற்றும் நாயகியாக நடிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படத்தை பிரபல பாடலாசிரியர் பா விஜய் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது; இவர் ஏற்கனவே ’ஸ்ட்ராபெரி’ மற்றும் ’ஆருத்ரா’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார், மேலும் சில படங்களில் நடித்துள்ளார் என்பதும், ஏராளமான படங்களுக்கு பாடல் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு ’அகத்தியா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ், மர்மங்கள் நிறைந்த ஒரு வரலாற்று கதை அம்சம் கொண்ட படம் என்பது இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. தீபக்குமார் ஒளிப்பதிவில், சாம் லோகேஷ் படத்தொகுப்பில், சண்முகம் கலை இயக்கத்தில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் ஜீவா, ராசி கண்ணா, அர்ஜுன், யோகி பாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிக்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
A Battle to Unbury The Mystery! A Journey to Redeem the Lost Glory💫! Here's the First Look of #Aghathiyaa
— Vels Film International (@VelsFilmIntl) October 7, 2024
A @pavijaypoet Mystery 💥
A @thisisysr Musical ✨@IshariKGanesh @VelsFilmIntl @JiivaOfficial #Arjun #RaashiKhanna #Edwardsonnanblick @iYogiBabu #VtvGanesh @KingsleyReddin… pic.twitter.com/ePXxKuwfun
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments