சிவகார்த்திகேயன் - கெளதம் மேனன் படத்தை உறுதி செய்த தயாரிப்பு நிறுவனம்!

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் கௌதம் மேனன் தற்போது சிம்பு நடித்துவரும் ’வெந்து தணிந்தது காடு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பதும் ஏற்கனவே அவர் விக்ரம் நடித்துவரும் ’துருவ நட்சத்திரம்’ மற்றும் ‘ஜோஸ்வா இமைபோல் காக்க’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் கவுதம் மேனன் இணையும் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருப்பதாக அந்ந்நிறுவனத்தின் தலைவர் ஐசரி கணேஷ் அவர்களின் மகள் ப்ரீத்தா கணேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இதனை அடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் கவுதம் மேனன் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஏற்கனவே ’டாக்டர்’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பதும் அவர் தற்போது ’டான்’ மற்றும் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.