வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த படம்.. டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம் நிறுவனத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதை பார்த்தோம். இந்த படத்தை ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபால் இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் ’பிடி சார்’ என்று வைக்கப்பட்டுள்ளதுடன் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகிய இணைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதனை அடுத்து இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, பிடி மாஸ்டர் வேடத்தில் நடித்து வருகிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையில், மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகி வரும் படத்தில் காஷ்மீரா நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் இன்னும் சில அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
Here is an exciting First look of @VelsFilmIntl 's #HHT7 titled as #PTsir starring & Music by @hiphoptamizha ! #PTsirFirstLook
— Vels Film International (@VelsFilmIntl) January 12, 2023
Dir by @karthikvenu10
Prod by @IshariKGanesh @kashmira_9 @editor_prasanna @madheshmanickam@Ashkum19 @swapnaareddy @thinkmusicindia @proyuvraaj pic.twitter.com/rBHPNcjd6Y
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com