ஒரு முடிவில்லா மர்ம.. அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடும் வேல்ஸ் பிலிம்ஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பு திரைப்படம் குறித்து அறிவிப்பை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு "தேவி" என்ற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், அதன்பின் "போகன் ஜுங்கா", "எல்கேஜி", "தேவி 2", "கோமாளி", "மூக்குத்தி அம்மன்" உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தது. இந்த ஆண்டு கூட "சிங்கப்பூர் சலூன்", "ஜோஸ்வா இமைபோல் காக்க’ ’பிடி சார்’படங்களை தயாரித்துள்ளது. தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் "ஜெனி" என்ற படத்தை தயாரித்து வருகிறது.
இந்த நிலையில், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் "ஒரு முடிவில்லா மர்மம்" என்ற கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளதால் இது ஒரு சரித்திர கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்றும், அநேகமாக சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சங்கமித்ரா’ படமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாக போஸ்டரில் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த படம் என்ன என்பதை நாளை மாலை 6 மணி வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.
An Unending Mystery & War Beyond Ages💥
— Vels Film International (@VelsFilmIntl) October 6, 2024
It's Time to Settle the Scores✨
Title & First Look Unveiling Tomorrow 6 PM.@IshariKGanesh @VelsFilmIntl @WamIndia#VelsNext pic.twitter.com/d8yE7K9szy
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com