ஒரு முடிவில்லா மர்ம.. அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடும் வேல்ஸ் பிலிம்ஸ்..!

  • IndiaGlitz, [Sunday,October 06 2024]

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தனது அடுத்த தயாரிப்பு திரைப்படம் குறித்து அறிவிப்பை நாளை மாலை 6 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு தேவி என்ற திரைப்படத்தை தயாரித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்த வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், அதன்பின் போகன் ஜுங்கா, எல்கேஜி, தேவி 2, கோமாளி, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை தயாரித்தது. இந்த ஆண்டு கூட சிங்கப்பூர் சலூன், ஜோஸ்வா இமைபோல் காக்க’ ’பிடி சார்’படங்களை தயாரித்துள்ளது. தற்போது ஜெயம் ரவி நடித்து வரும் ஜெனி என்ற படத்தை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் ஒரு முடிவில்லா மர்மம் என்ற கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளதால் இது ஒரு சரித்திர கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்றும், அநேகமாக சுந்தர் சி இயக்கத்தில் உருவாக இருக்கும் ’சங்கமித்ரா’ படமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்த படம் உருவாக இருப்பதாக போஸ்டரில் குறிப்பிட்டுள்ள நிலையில், இந்த படம் என்ன என்பதை நாளை மாலை 6 மணி வரை பொறுத்து இருந்து பார்ப்போம்.

 

More News

அஜித் மகன் யாருக்கு ரசிகர் தெரியுமா? ஷாலினி பகிர்ந்த புகைப்படம்..!

நடிகர் அஜித்துக்கு கோடி கணக்கான ரசிகர்கள் இருக்கும் நிலையில், அவரது மகன் யாருக்கு ரசிகர் என்பது குறித்து ஷாலினி அஜித் தனது Instagram பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார்.

'கங்குவா' இசை வெளியீட்டு விழா நடைபெறும் தேதி இதுவா? ரசிகர்கள் உற்சாகம்..!

சூர்யா நடித்த 'கங்குவா' திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று

'வேட்டையன்' ரிலீசுக்கு அடுத்த வாரமே ரிலீஸ் ஆகும் விமல் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

பொதுவாக மாஸ் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியானால் அடுத்த இரண்டு வாரத்திற்கு புதிய திரைப்படங்கள் வெளியாவதில்லை என்ற நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

'நான் மதம் மாற மாட்டேன்': சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த 'தளபதி 69' நடிகை..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 69வது திரைப்படத்தில் நடிக்க இருக்கும் பிரபல நடிகை மதம் மாறிவிட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவும் நிலையில், நான் எந்த காரணத்தை

'ஜெயிலர் 2' படத்திற்கு பின் நெல்சன் இயக்கும் படம்.. ஹீரோ இந்த பிரபல நடிகரா?

சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர் ' திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன், அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் இயக்க இருப்பதாகவும்,