பெற்றோர்களே எச்சரிக்கை! குழந்தையின் உயிரைப் பறித்த பிரியாணி!

  • IndiaGlitz, [Saturday,April 13 2019]

5 வயது சிறுமி, பிரியாணி சாப்பிட்டதால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்துள்ள புது காலனி பகுதியை சேர்ந்தவர்கள் சீனிவாசன் - கனகா தம்பதிகள்.

இந்நிலையில் சீனிவாசன் உறவினர் குடும்பத்தில், சுப நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அப்போது தயாரிக்கப்பட்ட பிரியாணி மீந்து போனதால் அதனை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மறுநாள், சூடு படுத்தி அதனை தங்களுடைய மகள் கோபிகா உள்ளிட்ட நான் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்துள்ளனர்.

இதனை சாப்பிட்டதும் குழந்தைகளுக்கு வாந்தி, பேதி, மயக்கம், ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் - கனகா தம்பதியினர், உடனடியாக குழந்தைகளை அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஃபுட் பாயிசன் ஆனதே கண்டறிந்த மருத்துவர்கள், உடனடியாக குழந்தைகளுக்கு உறிய சிகிச்சை அளித்தனர். இதில் சீனிவாசன் - கனகா தம்பதிகளின் குழந்தை கோபிகா பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அரக்கோணம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.