அரசியல் அறிவிப்புக்கு பின் ரஜினி அறிவித்த முதல்கட்ட நிர்வாகிகள் லிஸ்ட்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த இருபது ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக கூறி கொண்டிருந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது அரசியல் வருகையை உறுதி செய்தார். ரஜினியின் அரசியல் கட்சியின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் அவர் தனது ரசிகர் மன்றங்களையும் ஒழுங்குபடுத்தி வருகிறார்
இந்த நிலையில் அரசியல் அறிவிப்புக்கு பின்னர் ரஜினியின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் குறித்த முதல் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த நிர்வாகிகளே ரஜினியின் கட்சியிலும் நிர்வாகிகளாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் முதல்கட்ட அறிவிப்பில் வெளியாகியுள்ள வேலூர் மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளின் பட்டியல் இதோ:
1. மாவட்ட செயலாளர்: சோளிங்கர் ரவி
2. மாவட்ட இணை செயலாளர்: ஆர்.நீதி
3. மாவட்ட துணை செயலாளர்கள்: வாணியம்பாடி கணபதி, ராஜன் பாபு, முகமது கலிஃபா
4. மகளிர் அணி செயலாளர்: சங்கீதா
5. இளைஞர் அணி செயலாளர்: அருண்
மேற்கண்ட நிர்வாகிகளின் பட்டியல் ரஜினியின் அனுமதியுடன் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் வரும் 21ஆம் தேதி அரசியல் கட்சியின் பெயரையும் நிர்வாகிகள் பெயரையும் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கபப்டும் நிலையில் தற்போது ரஜினியின் மன்ற நிர்வாகிகள் பட்டியல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com