வேலூர் மக்களவை தேர்தல்: திமுக வேட்பாளர் வெற்றி
- IndiaGlitz, [Friday,August 09 2019]
வேலூர் மக்களவை தொகுதிக்கு கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தன. காலையில் இருந்து அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் மற்றும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகிய இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்த நிலையில் சற்றுமுன் இறுதி முடிவு அறிவிக்கப்பட்டது
இதன்படி வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 26,995 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகம் 4,77,199 வாக்குகளும் பெற்றனர்.
வாணியம்பாடி, வேலூர், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் திமுகவுக்கு அதிக வாக்குகளும் அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய தொகுதிகளில் அதிமுகவுக்கு அதிக வாக்குகளும் கிடைத்துள்ளது. வாணியம்பாடி தொகுதியில் அதிமுகவை விட திமுகவுக்கு சுமார் 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் கிடைத்ததே திமுகவின் வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த வெற்றியை அடுத்து மக்களவையில் திமுக கூட்டணியின் பலம் 37ல் இருந்து 38ஆக உயர்ந்துள்ளது. முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் முதல்முறையாக மக்களவைக்குள் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது