வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் தேதி அறிவிப்பு
- IndiaGlitz, [Thursday,July 04 2019]
மக்களவை தேர்தல் சமீபத்தில் நடந்தபோது தமிழகத்தில் உள்ள வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தலை திடீரென நிறுத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வேலூர் தொகுதியின் திமுக வேட்பாளரான கதிர் ஆனந்த் அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான இடங்களில் கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டதை அடுத்து தலைமை தேர்தல் ஆணையம், வேலூர் தொகுதிக்கான தேர்தலை ரத்து செய்தது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்ட வேலூர் பாராளுமன்றத் தொகுதியின் தேர்தல் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் தொகுதியில் வரும் 11ஆம் தேதி முதல் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும், வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 18ஆம் தேதி கடைசி நாள் என்றும், 19ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும் அறிவித்துள்ள தேர்தல் ஆணையம் ஜூலை 22ஆம் தேதிக்குள் வேட்புமனுக்களை திரும்ப பெற்று கொள வேண்டும் என்று அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி பதிவு செய்யப்பட்டும் வாக்குகள் ஆகஸ்ட் 9ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.