'தங்கமகன்' தனுஷின் வியக்க வைத்த கேரக்டர்கள்: பிறந்த நாள் ஸ்பெஷல்

  • IndiaGlitz, [Friday,July 28 2017]

'தங்கமகன்' தனுஷின் வியக்க வைத்த கேரக்டர்கள்: பிறந்த நாள் ஸ்பெஷல்

நடிகர், பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குனர், என பல அவதாரங்களை இந்த 30+ வயதுக்குள் ஒரு இளைஞர் எடுத்துள்ளார் என்றால் அதுதான் தனுஷ். கோலிவுட், பாலிவுட் மட்டுமின்றி ஹாலிவுட்டிலும் கால்பதித்து தனது முத்திரையை பதித்துள்ள தனுஷூக்கு நமது உளங்கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

மேலும் கோலிவுட் திரையுலகில் தான் ஏற்று நடிக்கும் கேரக்டர்களுக்காக மெனக்கிடுவதில் மிகச்சில நடிகர்களில் தனுஷூம் ஒருவர். கொக்கி குமார், வாசு, ரகுவரன் போன்ற கேரக்டர்களின் பெயர்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் தனுஷ் ஏற்று நடித்த முக்கிய கேரக்டர்கள் குறித்து பார்ப்போம்

துள்ளுவதோ இளமை - மாதேஷ்:

தனுஷின் முதல் படம், முதல் கேரக்டர். ஆனால் பத்து படங்களில் நடித்த அனுபவம் இந்த கேரக்டரில் தெரிந்தது. செல்வராகவன் திரைக்கதையில் கஸ்தூரி ராஜா இயக்கிய இந்த படத்தில் மூன்று பையன்கள், மூன்று பெண்கள் வீட்டை விட்டு வெளியேறி ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்குள் ஏற்படும் உணர்வுகள், பிரச்சனைகள் தான் கதை. இதில் தனுஷின் மாதேஷ் கேரக்டர் எளிதில் உணர்ச்சிவசப்படும் வித்தியாசமான கேரக்டர். அதை அவர் மிகச்சரியாக செய்து கோலிவுட்டுக்கு தான் தகுதியானவர் என்பதை நிரூபித்த படடம்

காதல் கொண்டேன் - வினோத்:

கிட்டத்தட்ட கமல்ஹாசனின் 'குணா' கேரக்டரை ஒட்டியது இந்த வினோத் கேரக்டர். அனாதயாக வளர்ந்த வினோத்துக்கு திவ்யா என்ற பெண் அறிமுகமாகிறார். அவளை இழந்துவிடக்கூடாது என்பதற்காக எதையும் செய்யும் முரட்டுத்துணிச்சலான கேரக்டர் தான் இந்த வினோத். தனுஷை அனைவரும் அடையாள தெரிய வைத்ததும் இந்த கேரக்டர்தான்

திருடா திருடி - வாசு:

இரண்டு சீரியஸ் படங்களுக்கு பின்னர் தனுஷ் ஏற்று நடித்த ஜாலியான விடலைப்பையன் கேரக்டர்தான் வாசு. முழுக்க முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்த படத்தில் வாசு கேரக்டர் தனுஷூகு மிக கச்சிதமாக பொருந்தியது

புதுப்பேட்டை - கொக்கி குமார்:

தனுஷை முன்னணி நடிகர்களின் பட்டியலுக்கு கொண்டு சென்றது இந்த கொக்கு குமார் கேரக்டர்தான். படத்தின் மிக அழுத்தமான இந்த கேரக்டரை தனுஷை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் படம் சொதப்பியிருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக இருந்தது. இந்த கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக அவருடைய மனைவியும் இயக்குனருமான ஐஸ்வர்யா, தான் இயக்கிய 'வைராஜா வை' படத்திலும் இந்த கேரக்டரை சரியான இடத்தில் பயன்படுத்தி கொண்டார்.

பொல்லாதவன் - பிரபு:

காதல், பொறுமை, ஆவேசம், ஆத்திரம் என ஒரு சராசரி இளைஞனுக்குரிய அத்தனை அம்சங்களும் ஒருங்கே அமைந்த கேரக்டர்தான் பிரபு. இயக்குனர் வெற்றிமாறன் தனுஷூக்காகவே உருவாக்கிய இந்த கேரக்டர் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

யாரடி நீ மோகினி - வாசு:

திருடா திருடி' வாசுவுக்கும் இந்த வாசுவுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. முதல்பாதி காமெடி இருந்தாலும் போக போக சீரியஸாகும் இந்த கேரக்டராக தனுஷ் நடித்தார் என்று சொல்வதை விட தனுஷ் வாழ்ந்தார் என்று சொல்வதுதான் பொருத்தமானது. மேலும், தனுஷூக்கு இணையாக நயன்தாராவும் தனது கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடுகளம் - கருப்பு:

தனுஷூக்கு தேசிய விருதை பெற்று தந்த படம். பொல்லாதவன்' படத்திற்கு பின்னர் மீண்டும் வெற்றிமாறனுடன் தனுஷ் இணைந்த படம். குரு பேட்டைக்காரனின் எதிர்ப்பையும் மீறி தான் வளர்க்கும் சேவலை சண்டைக்கு விட்டு ஜெயிக்கும் கருப்புவை பேட்டைக்காரன் மனதுக்குள் வெறுப்பதும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளுமே கதை. தனுஷ் இந்த படத்தில் ஒரு இடத்தில் கூட ஓவர் ஆக்டிங் இல்லாமல் மிக இயல்பாக நடித்ததால் தேசிய விருதுக்கு தகுதியுடையவர் ஆனார்.

மயக்கமென்ன - கார்த்திக் சாமிநாதன்:

செல்வராகவன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் நடித்த படம். மிகச்சிறந்த போட்டோகிராபராக ஆக வேண்டும் என்ற கொள்கையுடன் உள்ள இந்த கேரக்டர் சந்திக்கும் பல பிரச்சனைகள், நம்பிக்கை துரோகங்கள் தான் இந்த படத்தின் கதை. கிளைமாக்ஸில் தனது மனைவியை புரிந்து கொள்ளும் காட்சியில் கண்ணீரை வரவழைத்து அனைவரது பாராட்டுக்களை பெறும் வகையில் அமைந்தது தான் இந்த கார்த்திக் சாமிநாதன் கேரக்டர்.

3 - ராம்:

ஏற்கனவே மனநிலை சரியில்லாதவர் கேரக்டரில் தனுஷ் ஓரிரு முறை நடித்துவிட்டதால் மீண்டும் அதே கேரக்டரை பார்க்க ரசிகர்களுக்கு சலிப்பை தட்டினாலும் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு வித்தியாசத்தை வெளிப்படுத்தியிருந்தார். ஐஸ்வர்யா தனுஷின் படைப்பில் உருவான இந்த ராம் கேரக்டரும் மக்களின் மனதை தொட்ட ஒரு கேரக்டர்தான்

மரியான் - மரியான்:

சூடான் நாட்டில் இந்தியத் தொழிலாளிக்கு ஏற்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த படத்தின் கதையில் மரியான் கேரக்டர் காதல், பரிதாபம், கோபம், வீரம், ஆத்திரம் என அனைத்தும் கலந்த ஒரு கலவையான கேரக்டர். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை தனுஷின் கேரக்டருக்கு பலம் சேர்த்தது என்றால் அது மிகையில்லை

வேலையில்லா பட்டதாரி - ரகுவரன்:

தனுஷ் நடித்த படத்திலேயே அதிக புகழ் பெற்றது இந்த ரகுவரன் கேரக்டர்தான். ஒரு எஞ்சினியருக்கு ஏற்படும் பிரச்சனைகளை காதல், காமெடி, சீரியஸ் என அனைத்து அம்சங்களையும் கொண்டு உருவான இந்த படத்தில் ரகுவரனின் கேரக்டர் இன்று வரை அனைவரின் மனதை கவர்ந்த ஒரு கேரக்டர்தான். எனவே தான் இந்த படத்தின் இரண்டாவது பாகத்திலும் இந்த கேரக்டர் தொடர்கிறது.

அனேகன் - அஸ்வின், முருகப்பா, காளி:

இந்த மூன்று கேரக்டர்களுமே மூன்றுவிதமான அடிப்படை குணங்களை கொண்ட கேரக்டர். மூன்றையுமே அவர் மிக அழகாக வித்தியாசப்படுத்தியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் வெற்றி படங்களில் இதுவும் ஒன்று.

மாரி - மாரி:

லோக்கல் ரவுடி மாரி கேரக்டர் தனுஷுக்கு மிக கச்சிதமாக பொருந்திய படம். கேரக்டருக்கேற்றவாறு உடல்மொழியை மாற்றுவதில் வல்லவரான தனுஷ், இந்த படத்தின் கேரக்டருக்காக வித்தியாசமான தனது உடல் மொழியை மாற்றி அனைவரின் கவனத்தையும் பெற்றார். வெகுவிரைவில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கமகன் - தமிழ்:

தமிழுக்கு என்றும் தோல்வியே கிடையாது என்று கேரக்டரின் பெயரிலேயே பஞ்ச் வசனம் இடம்பெற்ற படம். தந்தையின் மரணத்திற்கு காரணமானவனை பழிவாங்கும் கேரக்டர் என்ற பழைய கதைதான் என்றாலும் தனுஷ் தனது நடிப்பால் அனைவரின் கவனத்தையும் பெற்ற படங்களில் ஒன்று.

எந்த கேரக்டரை கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறி ரசிகர்களுக்கு முழு திருப்தி அளிக்கும் வகையில் நடிப்பை வெளிப்படுத்தி வரும் தனுஷ், தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அவர் இன்னும் பல வேடங்கள் ஏற்று தமிழ் சினிமா மட்டுமின்றி உலக அரங்கில் இன்னும் பல வெற்றிகள் பெற இந்த இனிய பிறந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

More News

இப்ப வரைக்கும் வரவில்லை: இனிமே வர வச்சிடாதிங்க: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசனின் சமீபத்திய விஸ்வரூப எழுச்சி, அவர் அரசியலுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் 'அரசியலுக்கு இன்று வரை நான் வரவில்லை, ஆனால் வரவழைத்துவிட வேண்டாம்' என்று தனியார் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்....

சந்தானம் நடிக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்தின் சென்சார் தகவல்கள்

காமெடி நடிகரில் இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன சந்தானம் நடித்து வரும் படங்களில் ஒன்று 'சர்வர் சுந்தரம்'. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் நிறைவு பெற்று ரிலீசுக்கு தயாராக இருந்த நிலையில் இன்று இந்த படம் சென்சாருக்கு சென்றது...

அஜித்தின் அர்ப்பணிப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது. கருணாகரன்

அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படத்தில் காமெடி நடிகராக கருணாகரன் நடித்துள்ளார் என்பது அனைவரும் தெரிந்ததே. இந்த நிலையில் இன்று காலை முதல் கருணாகரனின் 'விவேகம்' ஸ்டில்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது...

பாகிஸ்தான் பிரதமர் திடீர் நீக்கம்! ராணுவம் கைக்கு செல்கிறதா ஆட்சி?

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் அவ்வப்போது ராணுவம் ஆட்சியை கைப்பற்றி வருவது தெரிந்ததே...

விரக்திக்கு உள்ளாகும் ஓவியா: புரட்சிப்படை கொந்தளிப்பு

பிக்பாஸ் வீட்டில் எப்போதுமே  ஜாலியாக சிரித்த முகத்துடன் இருப்பது ஓவியா மட்டுமே. ஆனால் அவரை வெறுப்பேற்றி அழவைத்து பார்ப்பதே ஒருசிலருக்கு முழு நேர பணியாக உள்ளது. குறிப்பாக ஜூலியை கூறலாம்...