'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்'. இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,May 05 2016]
கடந்த ஆண்டு விஷ்ணு நடித்த 'இன்று நேற்று நாளை' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து அவர் தற்போது ஒரே நேரத்தில் 5 படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்.

எழில் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சூரி, ஆடுகளம் நரேன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தின் இசை வெளியீடு வரும் 6ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த படத்திற்கு 'எங்கேயும் எப்போதும்' உள்பட பல படங்களுக்கு இசையமைத்த சி.சத்யா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.