'வேலைக்காரன்' ரன்னிங் டைம் குறித்த தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
கிறிஸ்துமஸ் விருந்தாக வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ள 'வேலைக்காரன்' திரைப்படத்திற்கு இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 'ரெமோ' வெளியாகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு இந்த படம் ஒரு நல்ல விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் இந்த படம் சமீபத்தில் சென்சார் செய்யப்பட்டு சென்சார் அதிகாரிகள் இந்த படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியது மட்டுமின்றி படக்குழுவினர்களை பாராட்டியதாகவும் வெளிவந்த செய்தியினை பார்த்தோம். இந்த நிலையில் இன்று இந்த படத்தின் சென்சார் சான்றிதழ் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது. அதில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவலும் உள்ளது.
இந்த படம் 159 நிமிடங்கள் 41 வினாடிகள் அதாவது 2 மணி நேரம் 39 நிமிடங்கள் 41 வினாடிகள் ஓடும் வகையில் உள்ளது. படத்தின் நீளம் சற்று அதிகம் என்றாலும் சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் மோகன்ராஜா இணைந்துள்ளதால் சுவாரஸ்யமான காட்சிகளுக்கு பஞ்சமிருக்காது என்றே கூறப்படுகிறது. மேலும் வரும் ஞாயிறு முதல் இந்த படத்தின் முன்பதிவு தொடங்கவுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout