மற்ற ஹீரோக்களில் இருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுவது எதில்? நடிகர் சார்லி
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் சார்லி கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணசித்திர கேரக்டர்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் 22ஆம் தேதி வெளிவரவுள்ள 'வேலைக்காரன்' திரைப்படத்தில் அவர் சிவகார்த்திகேயனின் தந்தை கேரக்டரில் நடித்துள்ளார். உணர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் நடித்த தனது அனுபவ நடிப்பை இந்த படத்தில் அவர் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதாக படக்குழுவினர் பாராட்டி வரும் நிலையில் தனது கேரக்டர் குறித்தும் சிவகார்த்திகேயனுடன் ஏற்பட்ட நட்பு குறித்தும் சார்லி கூறியதை தற்போது பார்ப்போம்
'' வெகு சிலரிடம் மட்டுமே நாம் மனதளவில் குறுகிய காலத்திலேயே நெருக்கமாகிவிடுவோம். அது போன்ற ஒரு அருமையான நபர் தான் சிவகார்த்திகேயன். இப்படத்தில் , திரைக்கு பின்னாலும் எங்கள் நட்பு தொடர்ந்து மேலும் உறுதியானது. தனது மிக எளிமையான, நல்ல குணத்தால் பெரும்பாலான ஹீரோக்களிடமிருந்து சிவகார்த்திகேயன் வேறுபடுகிறார். அவரது இந்த எளிமையும் , எங்களது நட்பும் எங்கள் இந்த மகன் -தந்தை கதாபாத்திரங்களை மேலும் சிறப்பாகியுள்ளது.
இப்படத்தில் எங்களது கூட்டணி ஜனரஞ்சகமாகவும் உணர்வுபூர்வமாகவும் இருக்கும். மகனின் முக்கியமான முடிவுகளுக்கு ஆதவளித்து துணை நிற்கும் ஒரு அருமையான தந்தை கதாபாத்திரத்தில் நான் நடித்துள்ளேன். இயக்குனர் மோகன் ராஜா சார் , ஒளிப்பதிவாளர் ராம்ஜி சார் மற்றும் கலை இயக்குனர் முத்துராஜ் சார் ஆகியோர் வெறும் தொழில்நுட்ப கலைஞர்கள் கிடையாது. அவர்களை மிகப்பெரிய தொழில் வித்தகர்கள்' என்று தான் கூறவேண்டும்' என்று சார்லி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments