வேலைக்காரன்' படத்தின் 2வது சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,October 24 2017]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கியுள்ள 'வேலைக்காரன்' திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'கருத்தவனெல்லாம் கஜிலாம்' என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைக்காரன் படத்தின் 2வது சிங்கிள் பாடலான 'இறைவா' என்ற பாடல் வரும் நவம்பர் 2ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த பாடலும் ரசிகர்களிடையே சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் கிறிஸ்துமஸ் திருநாளில் வெளியாகவுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பகத்பாசில், நயன்தாரா, சினேகா, பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, விஜய் வசந்த், ஆர்ஜே பாலாஜி, சதீஷ், ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்துள்ளனர். ராம்ஜி ஒளிப்பதிவில் விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.